iPadஇல் ஸ்விட்ச் கட்டுப்பாட்டை அமைத்தல் மற்றும் ஆன் செய்தல்
ஸ்விட்ச் கட்டுப்பாட்டை அமைக்க, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்விட்ச்களை இணைத்துச் சேர்த்து, ஒவ்வொரு ஸ்விட்ச்சுக்கும் அதற்கான செயலை ஒதுக்க வேண்டியிருக்கும். ஸ்கேனிங் ஸ்டைலைத் தேர்வுசெய்த பிறகு உங்கள் தேவைகளுக்கு ஏற்ப பிற அமைப்புகளை நீங்கள் மேம்படுத்தலாம். ஸ்விட்ச் கட்டுப்பாட்டை ஆன் செய்த பிறகு, நீங்கள் ஒதுக்கப்பட்ட செயல்களை மாற்ற வேண்டியிருக்கும் அல்லது அமைப்புகளை மீண்டும் சரிசெய்ய வேண்டியிருக்கும். இந்தப் படிகளைச் செய்வதில் உங்களுக்குச் சிரமம் இருந்தால், உங்களுக்கு அருகிலுள்ள Apple Storeஇல் இருந்து பிரத்தியேக உதவியை நீங்கள் பெறலாம்.
படி 1: வெளிப்புற ஸ்விட்ச்சை இணைத்தல் (தேவையெனில்)
அடாப்டிவ் ஆக்சஸரி, ஜாய்ஸ்டிக், கேம் கன்ட்ரோலர் அல்லது MFi சாதனத்தை ஸ்விட்ச் கட்டுப்பாட்டிற்கு நீங்கள் பயன்படுத்த விரும்பினால், முதலில் உற்பத்தியாளரின் வழிமுறைகளைப் பின்பற்றி அதை iPad உடன் நீங்கள் இணைக்க வேண்டும். Bluetooth® பயன்படுத்தி ஸ்விட்ச்சை இணைத்தால், அதை iPad உடன் நீங்கள் இணைக்க வேண்டும்.
ஸ்விட்ச்சை ஆன் செய்யவும்.
அமைப்புகள்
> Bluetooth என்பதற்குச் சென்று, Bluetoothஐ ஆன் செய்த பிறகு, ஸ்விட்ச்சின் பெயரைத் தட்டவும். பிறகு திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
படி 2: ஸ்விட்ச்களைச் சேர்த்து, அவற்றுக்கான செயல்களை ஒதுக்குதல்
நீங்கள் ஒரு ஸ்விட்ச்சை மட்டும் பயன்படுத்தலாம் அல்லது வெவ்வேறு செயல்களைச் செய்ய, நீங்கள் பல ஸ்விட்ச்களைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு ஸ்விட்ச்சும் ஒதுக்கப்பட்ட செயலை (எ.கா., ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுத்தல், கர்சரை அடுத்ததற்கு நகர்த்துதல்) செய்யும்.
அமைப்புகள்
> அணுகல்தன்மை > ஸ்விட்ச் கட்டுப்பாடு > ஸ்விட்ச்கள் என்பதற்குச் செல்லவும்.“புதிய ஸ்விட்ச்சைச் சேர்” என்பதைத் தட்டவும், பின்னர் வெளிப்புறம், திரை, கேமரா, பின்பக்க தட்டுதல் அல்லது ஒலி என்பதைத் தேர்வுசெய்யவும்.
நீங்கள் சேர்க்க முயலும் வெளிப்புற ஸ்விட்ச் பட்டியலில் காட்டப்படவில்லை என்றால், மேலே படி 1: வெளிப்புற ஸ்விட்ச்சை இணைத்தல் (தேவையெனில்) என்பதில் விவரிக்கப்பட்டுள்ளபடி அது உங்கள் iPad உடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.
செயல்களுக்கு ஸ்விட்ச்களை ஒதுக்கவும்.
உங்களிடம் உள்ள ஸ்விட்ச்களின் எண்ணிக்கை மற்றும் கீழே, படி 3: ஸ்கேனிங் ஸ்டைலைத் தேர்வுசெய்தல் என்பதில் நீங்கள் தேர்வுசெய்யும் ஸ்கேனிங் ஸ்டைலைப் பொறுத்து ஸ்விட்ச்சுக்கான செயல் இருக்கும். எந்தச் செயலை ஒதுக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், “ஐட்டத்தைத் தேர்ந்தெடு” என்பதைத் தேர்வுசெய்யவும், இது தானியங்கி ஸ்கேனிங் உடன் (இயல்புநிலை ஸ்கேனிங் ஸ்டைல்) இணக்கமாக இருக்கும். பின்னர் இந்த அமைப்புக்குத் திரும்பி, ஒதுக்கப்பட்ட செயலை நீங்கள் மாற்றலாம்.
உதவிக்குறிப்பு: உங்கள் iPadஐ நீங்கள் ஏற்கெனவே அமைத்துள்ள சைகைகளைப் பயன்படுத்தும் கேம் கன்ட்ரோலராக மாற்றவும். இது, உங்கள் iPad முழுவதும் நகரவும் அதைக் கட்டுப்படுத்தவும் உள்ள அதே ஸ்விட்ச்சை (அல்லது மாற்று உள்ளீட்டு முறை) போல இருக்கும்.
படி 3: ஸ்கேனிங் ஸ்டைலைத் தேர்வுசெய்தல்
இயல்புநிலையில், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஒரு ஐட்டத்திலிருந்து அடுத்த ஐட்டத்திற்கு கர்சர் தானாகவே நகரும். கர்சரை நேரடியாக நகர்த்த விரும்பினால், வேறு ஸ்கேனிங் ஸ்டைலை நீங்கள் தேர்வுசெய்யலாம்.
அமைப்புகள்
> அணுகல்தன்மை > ஸ்விட்ச் கட்டுப்பாடு > ஸ்கேனிங் ஸ்டைல் என்பதற்குச் சென்று, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:
தானியங்கு ஸ்கேனிங்: குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, கர்சர் அடுத்த ஐட்டத்திற்குத் தானாகவே நகரும். இது இயல்புநிலை ஸ்கேனிங் ஸ்டைல் ஆகும்.
ஒரே ஒரு ஸ்விட்ச் மூலம் நீங்கள் தானியங்கு ஸ்கேனிங்கைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், “ஐட்டத்தைத் தேர்ந்தெடு” செயல் அந்த ஸ்விட்ச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யுங்கள்.
நேரடி ஸ்கேனிங்: “அடுத்ததற்கு நகர்த்து” ஸ்விட்ச்சை நீங்கள் செயல்படுத்தும்போது கர்சர் அடுத்த ஐட்டத்திற்கு நகரும்.
நேரடி ஸ்கேனிங்கிற்குக் குறைந்தது இரண்டு ஸ்விட்ச்கள் தேவை. “அடுத்ததற்கு நகர்த்து” செயல் ஒரு ஸ்விட்ச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதையும், “ஐட்டத்தைத் தேர்ந்தெடு” செயல் வேறொரு ஸ்விட்ச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதையும் உறுதிசெய்யுங்கள்.
ஒற்றை ஸ்விட்ச் படிநிலை ஸ்கேனிங்: “அடுத்ததற்கு நகர்த்து” ஸ்விட்ச்சை நீங்கள் செயல்படுத்தும்போது, கர்சர் அடுத்த ஐட்டத்திற்கு நகரும். குறிப்பிட்ட காலத்திற்குள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், தற்போதைய ஐட்டம் தானாகத் தேர்ந்தெடுக்கப்படும்.
இந்த ஸ்கேனிங் ஸ்டைலுக்கு ஒரு ஸ்விட்ச் மட்டுமே தேவை. “அடுத்ததற்கு நகர்த்து” செயல் ஒரு ஸ்விட்ச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யுங்கள்.
படி 4: ஸ்விட்ச் கட்டுப்பாடு அமைப்புகளை மேம்படுத்துதல்
உங்கள் குறிப்பிட்ட தேவைகள், ஸ்டைல் ஆகியவற்றுக்கு ஏற்ப, ஸ்விட்ச் கட்டுப்பாடு செயல்படும் விதத்தை நீங்கள் பல்வேறு வழிகளில் மாற்றலாம். உதாரணத்திற்கு, நீங்கள் ஸ்கேனிங் வேகத்தை மாற்றலாம் அல்லது ஹைலைட் செய்யப்பட்டவற்றை iPad வாசிக்கவும் அனுமதிக்கலாம்.
அமைப்புகள்
> அணுகல்தன்மை > ஸ்விட்ச் கட்டுப்பாடு என்பதற்குச் சென்று, பின்வருவனவற்றில் ஒன்றைச் சரிசெய்யவும்:
தானியங்கு ஸ்கேனிங் நேரம்: ஐட்டம் ஸ்கேன் செய்யப்படும் வேகத்தை மாற்றலாம்.
முதல் ஐட்டத்தில் இடைநிறுத்துதல்: ஒரு குழுவில் உள்ள முதல் ஐட்டத்தில் இடைநிறுத்தும் வகையில் ஸ்கேனிங்கை அமைக்கலாம்.
லூப்கள்: ஸ்விட்ச் கட்டுப்பாட்டை மறைப்பதற்கு முன்பு திரையில் எத்தனை முறை விரலைச் சுழற்ற வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யலாம்.
ரிப்பீட்டை மாற்றுதல்: ஸ்விட்ச் அழுத்தப்படும்போது, முந்தைய அல்லது அடுத்த ஐட்டத்திற்கு நகர்த்துவதற்கு முன்பு ஏற்படும் தாமதத்திற்கான கால அளவை அமைக்கலாம்.
அதிக நேரம் அழுத்துதல்: ஒரு ஸ்விட்சை நீங்கள் அழுத்திப் பிடித்திருக்கும்போது வேறொரு செயல் செய்யப்பட வேண்டுமா என்பதை அமைக்கலாம். அந்தச் செயல் செய்யப்படுவதற்கு முன்பு எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பதையும் அமைக்கலாம்.
தட்டுதல் செயல்பாடு: ஸ்கேனர் மெனுவைக் காட்ட, தட்டுதல் செயல்பாட்டைத் தேர்வுசெய்த பிறகு இரண்டாவது ஸ்விட்ச் செயலைச் செய்வதற்கான கால இடைவெளியை அமைக்கலாம்.
தட்டிய பிறகு ஃபோகஸ் செய்யப்படும் ஐட்டம்: ஸ்விட்ச் கட்டுப்பாடு, நீங்கள் தட்டும் ஐட்டத்தில் இருந்து ஸ்கேன் செய்வதைத் தொடங்குமா அல்லது முதலில் இருந்தே தொடங்குமா என்பதைத் தேர்வுசெய்யலாம்.
அழுத்திப்பிடித்தல் காலஅளவு: ஸ்விட்ச் செயலாக ஸ்விட்ச் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு அதை எவ்வளவு நேரம் அழுத்திப் பிடித்திருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடலாம்.
ரிப்பீட்டைப் புறக்கணித்தல்: தொடர்ந்து தற்செயலாக ஸ்விட்ச் செயல்படுத்தப்படுவது புறக்கணிக்கப்படும்.
ஒலி எஃபெக்ட்டுகள்: ஒலி எஃபெக்ட்டுகள் ஆன் செய்யப்படும்.
பேச்சு: ஐட்டங்கள் ஸ்கேன் செய்யப்படும்போதே அவை வாசிக்கப்படும்.
மெனு ஐட்டங்கள்: ஸ்கேனர் மெனுவில் காட்டப்படும் செயல்களையும் அவை தோன்றுவதற்கான வரிசைமுறையையும் தேர்வுசெய்யலாம்.
குழு ஐட்டங்கள்: வேகமான நகர்வதற்கு ஐட்டங்களைக் குழுவாக்கம் செய்யலாம்.
பெரிய கர்சர்: ஹைலைட் மேலும் பெரிதாக்கப்படும்.
கர்சர் நிறம்: வேறொரு ஹைலைட் நிறம் தேர்வுசெய்யப்படும்.
படி 5: ஸ்விட்ச் கட்டுப்பாட்டை ஆன் செய்தல்
முக்கியம்: ஸ்விட்ச் கட்டுப்பாடு ஆன் செய்யப்பட்டுள்ளபோது, ஸ்விட்ச் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற தொடுதிரையில் உள்ள அடிப்படை சைகைகளை உங்களால் பயன்படுத்த முடியாது.
அமைப்புகள்
> அணுகல்தன்மை > ஸ்விட்ச் கட்டுப்பாடு என்பதற்குச் சென்று, “ஸ்விட்ச் கட்டுப்பாடு” என்பதை ஆன் செய்யவும்.
உதவிக்குறிப்பு: நீங்கள் அணுகல்தன்மைச் சுருக்கவழிக்கு ஸ்விட்ச் கட்டுப்பாட்டைச் சேர்க்கலாம். பிறகு முகப்பு பட்டனைக் கொண்ட iPadஇல் முகப்பு பட்டன் அல்லது மற்ற iPhone மாடல்களில் மேல் பட்டனை மூன்று முறை கிளிக் செய்வதன் மூலம் ஸ்விட்சை வேகமாக ஆன் அல்லது ஆஃப் செய்யலாம்.